search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் முன்னாள் முதல் மந்திரி"

    மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், சிகிச்சை முடிந்து இன்று பாட்னா திரும்பினார். #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் பீகாரில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு அவருக்கு 5 வழக்குகளில் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மகனது திருமணம் முடிந்ததும் கடந்த திங்கட்கிழமை அவர் மும்பை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது இந்த ஜாமீனை மருத்துவ காரணங்களுக்காக மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று லாலு சார்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லாலு பிரசாத்துக்கு ஜாமீன் நீடிப்பு வழங்க முடியாது என்று மறுத்ததுடன், வரும் 30-ம் தேதி அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், மும்பை ஏசியன் ஹார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், இன்று சிகிச்சை முடிந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு திரும்பினார். #LaluPrasadYadav
    ×